5th Anniversary Celebrations

உங்களின் பேராதாரவுடன் நமது டாக்டர். கலாம் வழியில் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் மூலம் சாலையோரம் உள்ள முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள், மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் மற்றும் பலதரப்பட்ட ஏழை, எளியோருக்கும் 52 மாதங்களாக மற்றும் 5 வருட பயணமாக தொடர்ந்து உணவு அளிக்கப்பட்டது மேலும் பொங்கல் நிகழ்ச்சியும் தன்னார்வலர்களுடன் கொண்டாடப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் சேவைகளை ஊக்குவிக்கவும் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் கீழ்க்கண்ட ஊர்களில் வழங்கப்பட்டது என மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்….

இடங்கள்:
தலைமை அலுவலகம் – காஞ்சிபுரம்.

கிளைகள்:
ஶ்ரீபெரும்பத்தூர், தாம்பரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், வந்தவாசி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், அவிநாசி, கரூர், புதுக்கோட்டை, தேனி, திருநெல்வேலி, பட்டுக்கோட்டை.

நமது அறக்கட்டளை தொடர்ந்து 53 வது மாதம் பிப்ரவரி மாதத்தில் 27.02.2022 ஆம் தேதி அன்று வீதியோரம் உள்ள முதியோர்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் மக்களுக்கு தேடித்தேடி சென்று 1225 நபர்களுக்கு ஒருவேளை உணவு அளிக்கப்பட்ட இடங்கள் உங்கள் பார்வைக்கு,

காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர், திருநெல்வேலி, சென்னை – தாம்பரம், சென்னை – மணலி சுற்றியுள்ள பகுதிகளில்,

மேற்கண்ட இடங்களில் அங்கு உள்ள நமது அறக்கட்டளையின் நிர்வாகிகளின் மூலம் உணவுகள் அளிக்கப்பட்டது என மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்….
💐💐💐💐💐💐💐💐

மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெற காரணமாக இருந்த நன்கொடையாளர்கள் மற்றும் பொருளுதவி மற்றும் உணவு கொண்டுபோய் சேர்க்கும் பணிகளை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் “மனமார்ந்த நன்றிகளைத்” தெரிவித்துக் கொள்கிறோம்…
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

உயிருள்ளவரை
உதவிடுவோம்!!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

5 + seven =