பசுமையாக மாற்றுவோம்

நமது அறக்கட்டளையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று எங்களின் குறிக்கோள் ஆகும். ஏரிகள், குளங்கள், குட்டைகள்,  வீதியோரத்தில் விதைப்பந்துகள் தயாரித்து தூவப்படுகிறோம்.

சுகாதார முகாம்

நமது அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மூலம் இரத்த தானம் மற்றும் கண்தானம் செய்கிறோம். மற்றும் அரசு மருத்துவமனைக்கு தேவையான மின்விசிறிகள், போர்வைகள், மெத்தைகள், சுத்திகரிப்பு அமிலங்கள், முக கவசங்கள், சுத்திகரிப்பு தூள்கள் மற்றும் அவசர காலகட்டத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். ஆக்ஸிஜன் கட்டுப்படுத்தும் கருவிகள் நமது அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்டது.

உணவு அளித்தல்

நமது அறக்கட்டளையின் மூலம் வீடு இன்றி மற்றும் தங்குவதற்கு இடமின்றி ஆதரவற்று வீதியோரத்தில் உள்ள மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. ஆதரவற்ற முதியோர்கள் இல்லம் மற்றும் தொற்றுக் காலகட்டத்தில் போராடும் மக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது.

தங்கமான நண்பர்கள்

நாங்கள் எப்பொழுதும் தயாராக உள்ளோம்...
வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக...

டாக்டர். கலாம் வழியில்
உதவும் கரங்கள் அறக்கட்டளை

நமது அறக்கட்டளை துவக்கும் பொழுது 14 நபர்கள் மட்டுமே இருந்தோம், இப்பொழுது 683 நபர்கள் இணைத்து உள்ளோம் பல நற்பணிகள் செய்திட...

நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் ``நாங்கள் அனைவரும் இணைந்து மற்றவர்களுக்கு பல உதவிகள் செய்கின்றோம் எந்தவித சூழ்நிலையிலும்.``

நமது அறக்கட்டளை இப்பொழுது 12 மாவட்டங்களில் 17 கிளைகள் துவங்கப்பட்டுள்ளது.

0

Branches

0+

Seed Balls

0+

Eye Donation

0+

Volunteer

நாங்கள் என்ன செய்கிறோம்

வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கின்றோம்.
  • முக்கியத்துவம் மிகுந்த நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் :

    நமது அறக்கட்டளை வருடத்தில் வரும் அனைத்து முக்கியமான நாட்களில் பல உதவிகள் செய்து வருகிறோம். அதில் APJ. அப்துல்கலாம் பிறந்தநாள், நினைவு நாள், குடியரசு தினம், மகளிர் தினம், தொழிலாளர்கள் தினம், அன்னையர் தினம், செவிலியர் தினம், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புத் தினம், இரத்த தானம் தினம், தன்னார்வலர்கள் தினம், டாக்டர்கள் தினம், சுதந்திர தினம், ஆசிரியர்கள் தினம், முதியோர்கள் தினம், காந்தி ஜெயந்தி, தண்ணிர் தினம், பசி தினம், சுற்றுச்சூழல் தினம்.

  • கிருமிநாசினி தெளித்தல்:

    நமது அறக்கட்டளை சுற்றி உள்ள பகுதிகளில் COVID-19 காலகட்டத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

  • குளம் தூர்வாரும் பணி :

    குளம் சுற்றிலும் முட்புதர்கள், குப்பை மற்றும் தேவையில்லாத பொருட்கள் கொண்டு இருந்தது. இதனை நமது அறக்கட்டளையின் மூலம் JCB இயந்திரம் கொண்டும் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் குளத்தைச் சுத்தம் செய்துள்ளோம்.

  • காணாமல் போன பெண்:

    தனது குடும்பத்தை துளைத்து, எங்கு செல்வது என்று தெரியாமல் துளைந்த வடமாநில பெண்ணை நமது அறக்கட்டளையின் மூலம் காவல்துறை மற்றும் சமூக நல துறையுடன் இணைந்து அந்த பெண்ணை அவர்களின் குடும்பத்துடன் 24 மணி நேரத்திற்குள் கொண்டு சேர்க்கப்பட்டது.

  • இறுதி சடங்கு :

    குடும்பத்தினரால் கைவிடப்பட்டு வீடு இன்றி தெருவில் வாழும் மூதாட்டி திடீர் மரணம் அடைந்தார். இதையறிந்து நமது அறக்கட்டளையின் மூலம் அம்மையார்க்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

  • புயல் பேரிடர் காலங்களில் உதவி :

    தமிழ்நாடு புயலால் பலமுறை பாதிப்புக்கு உள்ளானது. அந்த சமயத்தில் நமது அறக்கட்டளையின் மூலம் அங்கு சென்று உணவு சமைத்து பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கினோம். இங்கு அனைவரின் உதவியுடன் துணிகளை பெற்றுக்கொண்டு இந்த துணிகளை அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

  • தொற்றுக் காலகட்டத்தில் உதவி:

    COVID-19 பெரும் தொற்றுக் காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் நமது அறக்கட்டளை மூலம் அரிசி, காய்கறிகள், மருத்துகள், குழந்தைக்கு தேவைப்படும் பொருட்கள் வழங்கப்பட்டது.

    அந்த சமயத்தில் ஓய்வின்றி உழைத்த காவல்துறை, மருத்துவமனை, மின்சார துறை, தூய்மை பணியாளர்கள் மேற்கண்ட அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கவசங்கள் வழங்கப்பட்டது.

  • பார்வை இழந்த பெண்ணின் திருமணத்துக்கு உதவி :

    பார்வை இழந்த பெண்ணின் திருமணத்துக்கு தேவையான மணமக்கள் இருவருக்கும் முகூர்த்த உடைகள் வழங்கப்பட்டது.

  • மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலம் பெற உதவி:

    நமது அறக்கட்டளை மூலம் நகரும் நாற்காலி, சுவர் ஏணி, நிற்கும் சட்டகம், வட்ட விரல்கள் உடற்பயிற்சி, டிராம்போலைன், தோள்பட்டை கடத்தல் ஏணி, கால் வேலை வாய்ப்பு ஏணி, சிபி நாற்காலி ஆகிய உபகரணங்கள் அளிக்கப்பட்டது.

  • காலநிலை உதவி:

    நமது அறக்கட்டளை மூலம் வீதியில் வசிக்கும் மக்களுக்கு வானிலைக்கு ஏற்றவாறு உதவிகளை செய்கின்றோம்.

    கோடைக்காலத்தில் நீர்மோர் மற்றும் பழரசம் வழங்கப்பட்டது.

    குளிர் காலங்களில் போர்வைகளும் வழங்கப்பட்டது.

Kindly donate us to help more.