துவங்கப்பட வேண்டும் என்ற யோசனை

நாங்கள் சிறுவர்களாக உள்ள பொழுதில் பெரும் வறுமையில் வடினோம். அந்த சிறுவயதிலேயே இந்த வறுமையை ஒழிக்க வேண்டும் என்று யோசித்தோம்.

இந்த யோசனைக்கு பெரிதும் காரணமாக திகழ்ந்த எங்கள் ஆருயிர் நண்பர் தெய்வதிரு. A. ராம்குமார் அவர்கள் சிறுவயதிலேயே மரணமடைந்தார் என்பது எங்களுக்கு மிகுந்த மனவருத்தம் அளித்தது.

favicon

பசி

நாங்கள் முதலில் மாதத்தில் ஒருநாள் முடிவு செய்து, உணவகத்தில் உணவு வாங்கி அதனை பொட்டலங்களாக மாற்றி விதியில் வாழும் 50 நபர்களுக்கு அளித்தோம். எங்களிடம் 51வது நபர் பசிக்கு உணவு கேட்கும்போது எங்களின் இயலாமை நிலையை நினைத்து பெரிதும் வருத்தம் அடைந்தோம்.அன்று அனைவரும் கலந்து யோசித்து பிறகு நாங்கள் எங்கள் நண்பர்கள், எங்களுடன் பணிபுரியும் தோழர்கள், குடுப்பத்தினர்களிடம் நன்கொடை பெற்று எங்களால் முடித்தவரை பசியை ஒழிக்க போராடினோம்.

நாங்கள் கடந்த தடைகள்

மோசமான வானிலையின் போதும் நாங்கள் எங்கள் குறிக்கோளை கைவிடுவது இல்லை. எங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளது. (1. பண புழக்கம் இன்மை. 2. பெட்ரோல் விலை உயர்வு. 3. எங்களின் குடும்ப சூழ்நிலை. 4. எங்கள் தொழிலில் நாங்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள்). இவ்வளவு பிரச்சினைகள் எங்கள் வாழ்க்கையில் இருந்த போதிலும் நாங்கள் 14 நபர்களும் ஒற்றுமையாக செயல்படுகிறோம். எனவே 14 நபர்களை ``கலாம் அறக்கட்டளையின் தூண்கள்`` என்று அழைக்கின்றனர்.

அனைவரின் நம்பிக்கைகள் மற்றும் உதவிகள் எங்களுக்கு கிடைத்தது

எல்லா நன்கொடையாளரும் எங்களின் தொடர் முயற்சியை கண்டு ஆதரவு அளித்து ஊக்குவித்தார்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு எங்களை அறிமுகப்படுத்தி உதவினார்கள். அனைத்து நன்கொடையாளர்களும் எங்கள் சேவைகளைப் பற்றியும் அதை நாங்கள் சரியாக உடனுக்குடன் விளக்குவதன் மூலம் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவுகளை அளித்து வருகின்றார்கள்.

துவக்கம்

நமது அறக்கட்டளையை முதன் முதலில் திறந்து வைக்க நாங்கள் பள்ளியில் பயின்ற காலகட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. ஜெகன்நாதன் ஆசிரியரை அழைத்துவந்து துவக்கினோம்.

அப்போது நாங்கள் முதலில் ஒரு குழுவை துவங்கினோம் அதன் பெயர் "தங்கமான நண்பர்கள் ".

Mr. Jaganathan (Rtd)
WhatsApp Image 2021-05-29 at 10.29.52 PM
Mrs. Saraswathi Elanchezhian
WhatsApp Image 2021-05-29 at 10.24.07 PM

தங்கமான மங்கை

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் திருமதி. சரஸ்வதி இளஞ்செழியன் MA, M.Ed அவர்கள் தினமலர் நாளிதழில் எங்களின் சேவைகளை பாராட்டி வந்த செய்தியை கண்டு எங்களின் அறக்கட்டளையில் இணைந்தார். அவர்கள் அளித்த ஆதரவால் மற்றும் ஊக்குவித்ததன் மூலம் நாங்கள் சமூக சேவைகளை மிக ஆர்வத்துடன் செய்தோம். அவர்கள் ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் நமது அறக்கட்டளையின் மூலம் எண்ணற்ற உதவிகள் செய்துள்ளார். நமது அறக்கட்டளையில் உள்ள கொரோனா காலகட்டத்தில் வேலையை இழந்து வறுமையில் இருந்தோம். அந்த சமயத்தில் ஊருக்கெல்லாம் உணவு அளிக்க பாடுபட்ட எனது பிள்ளைகள் வறுமையில் வாழ கூடாது என்று எண்ணி அம்மையார் அவர்கள் பெரிதும் உதவினார்கள். எங்கள் அறக்கட்டளை அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு இவர் மட்டுமே முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

கலாம் அறக்கட்டளையின் தூண்கள்

கடவுளின் மூலம் பரிசாக கிடைத்த மக்கள்

திரு. ஜெயவேல் (காது கேளாதோர்) அவர்களின் ஆதரவால் காது கேளாதோர் நண்பர்கள் அனைவரையும் நமது அறக்கட்டளையில் இணைத்தார். பிறகு நாங்கள் செய்யும் சேவைகளை அவர்கள் அனைவரும் இணைந்து மிக சிறப்புடன் அடுத்த நிலைக்கு கொண்டு சென்றார்கள்.

உயிருள்ளவரை உதவிடுவோம்

எங்கள் அறக்கட்டளையின் குறிகோளின் படி எங்களின் பள்ளி நண்பர் A. Ram Kumar (late) கூறுவதுடன் வாழ்ந்து காட்டிய தெய்வதிரு. ராஜா மற்றும் தெய்வதிரு. கணேசன் (Deaf) இவர்கள் இருவரும் இறைவனடி சேர்ந்தார்கள்

Mr.Raja

Mr.Ram Kumar

Mr. Ganesan

ஏழை எளிய மக்களின் வேதனைகள்

ஏழை எளிய மக்களுக்கு நிறைய வேதனைகள் உள்ளதை உணர்ந்தோம். இதை சரி செய்திட நாங்கள் அனைவரும் இணைந்து கல்வி, பள்ளிகள் சீர் அமைத்தல், வீதியில் வாழும் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக நன்கொடை கேட்க துவங்கினோம். அவர்களின் அனைத்து துன்பங்கள் ஒழிக்கவே போராடுகின்றோம்.

இப்பொழுது

நமது அறக்கட்டளையில் இப்பொழுது 683 நபர்கள் இணைந்தோம் எங்கள் அறக்கட்டளை தமிழகத்தில் உள்ள 12 மாவட்டகளில் அறக்கட்டளை 17 கிளைகள் துவங்கப்பட்டு அங்குள்ள வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக போராடுகின்றோம்